கோவை: Business Investment: பசிபிக் கடல்பகுதியின் தென்மேற்கில் பப்புவா நியூ கினியா நாடு உள்ளது. மார்ச் 7ஆம் தேதியான இன்று பப்புவா நியூ கினியா நாட்டின் மேற்கு நியூ பிரிட்டன் மாகாண ஆளுநர் சசிந்திரன் முத்துவேல், ஒரு நாள் பயணமாக கோவைக்கு வருகை தந்தார்.
அவர் வடவள்ளி பகுதியிலுள்ள அந்நாட்டிற்கான இந்திய உயர்மட்ட ஆணையர் விஷ்ணு பிரபு வீட்டில் கோவை மாவட்ட தொழில் அமைப்பினருடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது தொழில் அமைப்பினர்கள், அந்நாட்டில் முதலீடு செய்வது தொடர்பாகப் பல்வேறு விளக்கங்களைக் கேட்டறிந்தனர்.
தொழில் முதலீடுகள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'தங்கள் நாட்டில் 95% நிலங்கள் பொதுமக்கள் வசம் இருக்கிறது. 5% நிலம் மட்டுமே அரசின் வசம் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகளை தாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்கள் நாட்டில் கல்வி, மருத்துவம் மற்றும் சிறு குறு தொழில்களில் அதிக அளவிலான முதலீடுகள் செய்யலாம். தற்போது எங்களது நாட்டில் தரமான கல்வி என்பது குறைவாகவே உள்ளது; ஆனால், திறமையான இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.