தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சர்வதேச நாய் மற்றும் பூனைகள் கண்காட்சி: செல்லப்பிராணிகளை கண்டு மகிழ்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர்! - செல்லப்பிராணிகளை கண்டு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ந்தனர்

கோவையில் சர்வதேச நாய் மற்றும் பூனைகள் கண்காட்சி நடைபெற்றது. இன்று(ஜூன்.05) ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் குடும்பத்துடன் வந்து நாய் மட்டும் பூனைகள் கண்காட்சியை கண்டு களித்தனர்.

சர்வதேச நாய் மற்றும் பூனைகள் கண்காட்சி
சர்வதேச நாய் மற்றும் பூனைகள் கண்காட்சி

By

Published : Jun 5, 2022, 7:27 PM IST

கோயம்புத்தூர் பீளமேடு சாலை, 'நவ இந்தியா' பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சர்வதேச நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சி நடைபெற்றது. இதனை ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்தனர். நாய்களுக்கான கண்காட்சியில் ராட்வீலர், பெல்ஜியன் ஷெப்பர்ட், பூடில், கிரேட் டேன், சிவாவா உள்ளிட்டப் பல்வேறு இன நாய்களும், ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை போன்ற இந்திய நாய் இனங்களும் பங்கேற்றன.

இந்த நாய் இனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. மேலும் இதில் தமிழ்நாடு காவல் துறையின் நாய்ப் படையைச் சேர்ந்த மோப்ப நாய்கள் பங்கேற்றது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது. இதேபோல பூனை கண்காட்சியில் பெர்சியன், பெங்கால், ஹிமாலயன், தேசி, சியாமிஸ், மீன் கூன் பூனைகள் போன்ற ஏராளமான இனத்தைச் சேர்ந்த சுமார் 150 பூனைகள் கண்காட்சியில் பங்கேற்றன.

சர்வதேச நாய் மற்றும் பூனைகள் கண்காட்சி

இதனை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டனர். மேலும் நாய் மற்றும் பூனை வளர்ப்பதில் உள்ள சந்தேகங்களையும் முறைகளையும் சிலர் கேட்டறிந்தனர். இதில் பஞ்சாப்பைச் சேர்ந்த நடுவர்கள் கோமல் தனோவா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஹரிஷ் படேல் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் பின்பற்றப்படும் இனங்களின் தரத்தின் அடிப்படையில் நாய்களை மதிப்பிட்டனர்.

சுதாகர் கடிகினேனி, ஆனி கரோல் மற்றும் டாக்டர் பிரதீப் ஆகியோர் பூனைகள் கண்காட்சியை மதிப்பீடு செய்து வெற்றிபெற்ற பூனைகளை அறிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் பலரும் குடும்பத்துடன் வந்து நாய் மட்டும் பூனைகள் கண்காட்சியை கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க:உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம்

For All Latest Updates

TAGGED:

Dog cat show

ABOUT THE AUTHOR

...view details