வால்பாறைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நகராட்சிக்கு சொந்தமான தடுப்பணை கருமலை எஸ்டேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் விரிவாக்கப் பணி, நகராட்சி ஆணையாளர் டாக்டர் க. பவுன்ராஜ் தலைமையில், பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டது. தற்போது வால்பாறை பகுதிக்கு, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருப்பதன் காரணமாகவும், வால்பாறை பொதுமக்களுக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டி இருப்பதாலும், இந்த தடுப்பணையில், ரூ.1.35 கோடி செலவில், தூர்வாருதல், சுற்றுச்சுவர் கம்பி வலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால், வால்பாறைக்கு தண்ணீர் விநியோகம் தடைப்படாமல் கிடைக்கும். ஜனவரி மாதங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்க்கும் காரணத்தை கருத்தில் கொண்டு, பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்பட வேண்டும் என்று நகராட்சி ஆணையாளர் கூறியுள்ளார்.
வால்பாறையில் செக் டேம் விரிவுபடுத்தும் பணி தீவிரம்! - கோவை செய்திகள்
கோயம்புத்தூர்: வால்பாறையின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் தடுப்பணையை விரிவுபடுத்தும் பணிகள் தீவிப்படுத்தப்பட்டுள்ளன.
Valparai check dam