கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரம் 35ஆவது வட்டத்தை சேர்ந்த அமைதி நகர் பகுதியில் நடுத்தர ஏழை எளிய மக்கள் வசித்துவருகின்றனர்.
மின் கட்டண உயர்வை கண்டித்து நூதன போராட்டம்! - கோவை மாவட்ட செய்திகள்
கோவை: பொள்ளாச்சி அருகே மின் கட்டண உயர்வில் இருந்து மீண்டுவர பொதுமக்கள் மற்றும் திமுகவினர், அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட பொருள்களை தானமாக திருப்பிக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா ஊரடங்கு காலத்தில் தமிழ்நாடு அரசு தவறான ரீடிங் எடுத்து மின்சார கட்டணத்தை பெரிய தொகையாக வசூலித்து வருவதாகவும், இதை செலுத்த முடியாத பொதுமக்கள் மாநில அரசு வழங்கிய கிரைண்டர் , மிக்ஸி, பேன் ஆகிய விலையில்லா மின்சாதன பொருள்களை உபயோகப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது என்று திமுக மாவட்ட விவசாய அணி குற்றம்சாட்டுகிறது.
ஆகவே, அதனை திருப்பி தானமாக தரும் போராட்டத்தில் ஈடுபடுவதாக திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்தார். இதனையடுத்து அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.