கோயம்புத்தூர்மாவட்டத்தில் உள்ள கோ-இந்தியா கூட்டரங்கில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் தலைமையில் கோவை மாவட்ட தொழில் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்பேட்டை
இதையடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகள், தொழில் அதிபர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மேற்கொண்டோம்.
இந்தக் கூட்டத்தில் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். இதுகுறித்த முதலமைச்சருக்கு எடுத்துச் செல்வோம். 2006ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது தொழில்பேட்டை அமைத்திட வேண்டும் என்பதற்காக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 314 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, ஆசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்பேட்டை அமைப்பதற்கு திட்டமிட்டு இடம் வழங்கப்பட்டது.
அதை திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அதிமுக ஆட்சியில் அதனை முடக்கி விட்டனர். தற்போது அதனை ஆய்வு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளோம். இதனால் 50 ஆயிரம் பேர் பலனடைவர். புதிய ஆட்சி வந்த சில தினங்களிலேயே 17ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் பெறப்பட்டு அதன் மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டது.
பட்ஜெட் கூட்டத் தொடர்
கரோனா காலத்திலும் தொழில்கள் மூடங்காமல் செயல்பட ஏற்றுமதிக்கான அனுமதியை வழங்கி இருக்கிறோம். கோவையில் அமேசான் நிறுவனம் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், 2ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு கோவை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதிய தொழில் உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் தொழில் பூங்கா அமைப்பதற்கான திட்டம் விரைவில் முதலமைச்சரால் அறிவிக்கப்படும். கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக முதலீட்டாளர் மாநாட்டில் வந்த முதலீடுகள் குறித்து பட்ஜெட் கூட்டத் தொடரில் தெரிவிக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மின்சார இணைப்பு'