தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உக்ரைனில் சிக்கியுள்ள மருத்துவ மாணவி-மீட்டுத்தரக் கோரும் பெற்றோர்..

உக்ரைனில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் மருத்துவம் படிப்பதற்காக சென்ற மகளை மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையை சேர்ந்த பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உக்ரைனில் சிக்கியுள்ள மருத்துவ மாணவி-மீட்டுத்தரக் கோரும் பெற்றோர்..
உக்ரைனில் சிக்கியுள்ள மருத்துவ மாணவி-மீட்டுத்தரக் கோரும் பெற்றோர்..

By

Published : Feb 25, 2022, 7:48 AM IST

Updated : Feb 25, 2022, 10:25 AM IST

கோயம்புத்தூர்:உக்ரைனில் உள்ள நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ரஷ்யாவின் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் இளைஞர்கள் பொதுமக்கள் பங்கெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் விமான நிலையங்கள் மற்றும் ராணுவ நிலையங்களைக் குறிவைத்து ரஷ்யா தாக்கும் நிலையில், உக்ரைன் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தாக்குதலுக்குள்ளான உக்ரைனில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் சிக்கியுள்ளனர். தலைநகர் கீவ் உட்பட பல இடங்களில் இணைய தள வசதிகள் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு மாணவர்கள் தங்களது பெற்றோர்களையும், உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் வசித்து வரும் பொண்ணூக்குட்டி தமிழ்ச்செல்வி தம்பதியரின் இளைய மகள் பார்கவி மேற்கு உக்ரைனில் உள்ள லிவிப் பகுதியில் செயல்பட்டுவரும் ஹாலிட்ஸ்கி லிவிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.

மருத்துவ மாணவிகள்

மீட்டுத்தரக் கோரும் பெற்றோர்..

போர் சூழல் காரணமாக மாணவி பார்கவி தங்கியிருக்கும் இடத்திலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார். அவருடன் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாக பார்கவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மகளுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் தங்கியிருக்கும் பகுதியில் போர் பதற்றம் இல்லை என தங்களுக்குத் தைரியம் கொடுத்ததாகவும், தங்களது மகளை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியை நாடி உள்ளதாகவும் தெரிவித்தார். அங்கு சிக்கித் தவித்து வரும் மாணவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பார்கவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் தங்களுடைய மகளைப் போல் கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் அங்கு மருத்துவம் பயின்று வருவதால் அவர்களை மீட்க வேண்டும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'தயவு செய்து உதவுங்க, ரொம்ப பயத்துல இருக்கோம்' - உக்ரைன் தமிழ் மாணவன்

Last Updated : Feb 25, 2022, 10:25 AM IST

ABOUT THE AUTHOR

...view details