தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்திய விமானப்படையிலுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி - இந்திய விமானப்படையினர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

இந்திய விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கோவை தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 17, 2022, 6:46 PM IST

கோவை:அவினாசி சாலையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இந்திய விமானப்படையினர் சார்பில் இன்று (ஆக.17) இந்திய விமானப்படையில் உள்ள பல்வேறு பிரிவுகளிலுள்ள வேலை வாய்ப்புகள், அதற்கான கல்வித்தகுதிகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கு விமானப்படை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் ஏராளமான தகவல்கள் குறித்து விமானப்படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்திய விமானப்படையினர்

இந்நிகழ்வின் இந்திய விமானப்படை சார்பில் கொண்டுவரப்பட்ட சிறப்பு விழிப்புணர்வு வாகனத்தினை கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். இதுபோன்று கோவையில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுமென இந்திய விமானப்படை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

தனியார் கல்லூரி கல்லூரியில் இந்திய விமானப்படை விழிப்புணர்வு

இதையும் படிங்க: "வன்முறைகளில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை"

ABOUT THE AUTHOR

...view details