தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் அதிமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

கோயம்புத்தூர் அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரான சந்திரசேகர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை
அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை

By

Published : Jul 7, 2022, 12:52 PM IST

கோயம்புத்தூர்: வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். கோவை அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். மேலும் இவர் அதிமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான நமது அம்மாவின் வெளியீட்டாளர்.

இந்நிலையில், வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, ஒப்பந்தம் உள்ளிட்ட விஷயங்களில் தலையிட்டதாக சந்திரசேகர் மீது திமுக மற்றும் அறப்போர் இயக்கம் புகார் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் வேலுமணி, அவர் சகோதரர் அன்பரசன், சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

அதிமுக பிரமுகர் வீட்டில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை

தொடர்ந்து கடந்தாண்டு மற்றும் கடந்த மார்ச் மாதம் அலுவலர்கள் வேலுமணி, சந்திரசேகருக்கு சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்நிலையில், இன்று (ஜூலை 6) காலை முதல் வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு உள்ளிட்ட அவர் சம்பந்தப்பட்ட 6 இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளியில் உள்ள அவர் வீட்டில் மட்டும் சுமார் 8 அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரசேகரின் மனைவி சர்மிளா கோவை மாநகராட்சி 38வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு நடத்த தடையில்லை - உச்ச நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details