தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல், பிறகு வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. தற்போது பள்ளி விடுமுறை மற்றும் கோடை காலத்தை முன்னிட்டு தமிழ்நாடு உட்பட வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
வால்பாறையில் பயணிகளிடம் தீவிர வாகன சோதனை!
கோவை: பொள்ளாச்சி அருகே வால்பாறை மற்றும் காடம்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் மது, நெகிழி மற்றும் வனத்தில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் இருக்கிறதா என்று வனத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, பொள்ளாச்சி ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் ஆழியார் வன சோதனைச் சாவடியில் வனத்துறையினர் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை சோதனையிட்டனர். இது குறித்து ரேஞ்சர் காசிலிங்கம் கூறுகையில், "தற்போது வால்பாறை, காடம்பாறை வனப்பகுதிகள் கோடை வெயிலால் காய்த்த நிலையில் காணப்படுகிறது. ஆதலால், சுற்றுலா பயணிகள் பிளஸ்டிக் மற்றும் வனத்தில் தீப்பற்ற கூடிய பொருட்கள், மதுபானங்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தீவிர வாகன சோதனை நடைபெறுகிறது. மேலும், வனப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் அத்துமீறும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது" என்றார்.