தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் ரூ.2 கோடி மதிப்புள்ள வைர, தங்க நகைகள் திருட்டு! - வீட்டில் திருட்டு சம்பவம்

கோவை: ரேஸ்கோர்ஸ் பகுதியில் வீட்டிலிருந்த இரண்டு கோடியே ஏழு லட்சம் மதிப்புள்ள வைர, தங்க நகைகளை அங்கு வேலை பார்த்த வடமாநில பணியாளர் திருடிச் சென்றது அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 கோடி கொள்ளை

By

Published : Aug 1, 2019, 11:51 AM IST


கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சைலேஷ் எத்திராஜ் என்பவர் வசித்துவருகிறார். சொந்தமாக மில் வைத்து நடத்திவரும் தொழிலதிபரான இவர் வீட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிகாஷ்குமார் ராய் என்பவர் வேலை பார்த்துவந்தார்.

இந்நிலையில், சைலேஷ் எத்திராஜ் வீட்டை பார்த்துக்கொள்ளும்படி பிகாஷ்குமார் ராயிடம் சொல்லி விட்டு, தனது குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றுள்ளார்.

இதையடுத்து, வீட்டிலிருந்த தங்கம், வைர நகைகளையும், சேர்த்து 17 லட்ச ரூபாய் ரொக்க பணத்தையும் வீட்டில் பிகாஷ்குமார் ராய் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சைலேஷ் எத்திராஜ் நேற்று வீடு திரும்பியபோது, வீட்டில் நகை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாக இருக்கும் பிகாஷ்குமார் ராயை தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். திருடப்பட்ட நகை, பணம் ஆகியவற்றின் மதிப்பு இரண்டு கோடியே ஏழு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகும்.

கொள்ளை நடந்த வீடு

ABOUT THE AUTHOR

...view details