கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் கோவையில் உள்ள தேர்வு மையங்களில் ஏராளமான பெண்கள் தேர்வெழுதினர்.
அதில் சிலர் பாலூட்டும் கை குழந்தைகளுடன் தேர்வெழுத வந்திருந்தனர். நீலம்பூரில் உள்ள கேபிஆர் கல்வி நிறுவனத்தில் நிறுவப்பட்ட தேர்வு மையங்களுக்கு தாய்மார்கள் தேர்வெழுத சென்ற நிலையில், தந்தைகள் குழந்தைகளை பார்த்துக்கொண்டனர்.