கோவை:பொள்ளாச்சி அடுத்த டி.கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் பெயிண்டர் சுரேஷ். இவர் தந்தை பெரியார் வீதியைச் சேர்ந்த கவிதாவை 13 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்து இரண்டு மகன்கள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சுரேஷ், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கவிதா கடந்த 5 மாதங்களுக்கு முன், இரு மகன்களுடன் தனது தாய் வீட்டுக்குச் சென்றார்.
இந்நிலையில், தனது மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு சுரேஷ் அழைத்துள்ளார். ஆனால் மனைவி மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்பெண் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.