தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை! - கோயம்பத்தூர் மாவட்டம் ரத்தினபுரி

கோயம்புத்தூர்: கூலி தொழிலாளி வீட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை!
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை கொள்ளை!

By

Published : Jan 20, 2021, 5:20 PM IST

கோயம்பத்தூர் மாவட்டம் ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி நாகராஜ் (38). நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு நாகராஜும் அவர் மனைவியும் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாகராஜ் ரத்தினபுரி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் துறையினர் மோப்ப நாய்கள் வைத்தும், கைரேகை நிபுணர்களை கொண்டும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:40 பவுன் தங்கை நகை கொள்ளை; வீட்டுப் பணியாளர் மீது சந்தேகம்!

ABOUT THE AUTHOR

...view details