தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்து முன்னணி ஆதரவாளர் வெட்டிக் கொலை! - coimbatore hindu munnani

கோயம்புத்தூர்: இந்து முன்னணி ஆதரவாளர் பிஜு(42) என்வர் முன்பகை காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்து முன்னணி ஆதரவாளர் பிஜு
இந்து முன்னணி ஆதரவாளர் பிஜு

By

Published : Sep 13, 2020, 5:36 PM IST

கோயம்புத்தூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிஜு(42). இந்து முன்னணி ஆதரவாளரான இவரை ஏழு பேர் கொண்ட கும்பல் இன்று (செப்டம்பர் 13) அரிவாளால் சரமாரியாக தாக்கியது. அதில் பலத்த காயமடைந்த அவர், மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கும்பல் துரத்தி செல்லும் சிசிடிவி

இதற்கிடையில் மருத்துவமனையில் பிஜுவின் நண்பர்கள், உறவினர்கள் குவிந்து, முக்குலத்தோர் தேவர் படை அமைப்பினர்தான் முன்பகை காரணமாக கொலை செய்ததாக குற்றஞ்சாட்டினர். மேலும் தற்போது பிஜுவை கொலை செய்த கும்பல் துரத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன் கைது!

ABOUT THE AUTHOR

...view details