கோயம்புத்தூர் மாவட்டம் கள்ளப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இந்து முன்னனி ஒருங்கிணைப்பாளர் மனோகரன், பெரியார் சிலையை உடைப்பேன் என்று வாட்ஸ்அப் குழு ஒன்றில் பதிவிட்டார். அதன் காரணமாக, இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும், வாக்குவாதம் ஏற்பட்டது.
பெரியார் சிலையை உடைப்பேன் என வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்டவர் கைது! - பெரியார் சிலையை உடைப்பதாக பதிவு
கோயம்புத்தூர்: பெரியார் சிலையை உடைப்பேன் என வாட்ஸ் அப் குழுவில் பதிவிட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் கைது
அதில் மனோகரன் பிரபுவை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனால் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பிரபு புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், மனோகரன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:முன்விரோதம் - முன்னாள் இந்து முன்னணி பிரமுகருக்கு கத்திக்குத்து!