தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உணவகத்திற்கு பெரியார் பெயர்... கடையை அடித்து நொறுக்கிய இந்து முன்னணி தொண்டர்கள் - Hindu leaders were arrested

கோவை அருகே தந்தை பெரியார் உணவகத்தை சூறையாடிய இந்து முன்னணி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 14, 2022, 12:15 PM IST

கோயம்புத்தூர்: காரமடையை அடுத்த கண்ணார்பாளையம் நால் ரோட்டில் பிரபாகரன் என்பவர் தந்தை பெரியார் உணவகம் ஒன்றை இன்று(செப்.14) திறக்க உள்ளார். அதற்கான பணிகளில் நேற்று தொழிலாளர்களுடன் ஈடுபட்டு வந்தார்.

அப்போது, அங்கு வந்த கும்பல் ஒன்று தந்தை பெரியார் என்ற பெயரை ஹோட்டலுக்கு வைக்கக் கூடாது என கூறி பிரபாகரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடையை அடித்து நொறுக்கியும், அங்கு இருந்தவர்களை கடுமையாக தாக்கிவிட்டும் தப்பியுள்ளனர்.

இதில், பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் பிரபாகரன் அளித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணியை சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் காரமடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தை கண்டித்து தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் இன்று மாலை காரமடையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதையும் படிங்க:பாஜகவில் இணைந்த 8 எம்எல்ஏக்கள்...கோவாவில் மீண்டும் காங்கிரஸ் பின்னடைவு

ABOUT THE AUTHOR

...view details