கோயம்புத்தூர்: இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎஃப்ஐ (பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா) அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், தமிழகத்திலிருந்து 11 பேரையும் இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
இதனால், கோவை முழுவதும் பதற்றம் நீடித்தது. இதனிடையே, பி.எஃப்.ஐ அமைப்புக்கும், அதன் துணை அமைப்புகளுக்கும் மத்திய அரசு5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
பி.எஃப்.ஐ அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், கோவையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட கோவையின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.