1998ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதியை குண்டுவெடிப்பு தினமாக இந்து முன்னணி அமைப்புகள் கடைப்பிடித்துவருகின்றனர். இந்நாளில், இந்து முன்னனி உள்பட பல இந்து அமைப்புகள் இணைந்து குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறும்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு தினம் - பாதுகாப்புப் பணியில் காவலர்கள் அதேபோல இந்த ஆண்டும் அஞ்சலியுடன் பேரணி நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். இதில் எவ்வித அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக சேலம் டிஐஜி பிரதீப் குமார், டிஜிபி ஜெய்ஹிந்த் முரளி ஆகியோர் தலைமையில் மொத்தம் 3,500 காவலர்கள் கோவையிலுள்ள முக்கிய இடங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை ரயில் நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் காவல் துறையினர் நேற்று மாலை முதல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மளிகைக்கடை பூட்டை உடைத்து 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொள்ளை