தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதலமைச்சர் கரோனா நிவாரண நிதிக்கு சேமிப்பு பணத்தை அளித்த 98 வயது மூதாட்டி - Cm corona relief fund

கோவை: 98 வயது மூதாட்டி ஒருவர் முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Corona relife fund
Corona relife fund

By

Published : Jun 16, 2021, 9:50 PM IST

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியில் உள்ள அன்னதாசம் பாளையத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (98). இவரது கணவர் நஞ்சப்ப உடையார் சுதந்திர போராட்ட தியாகி. கணவரின் மறைவிற்குப் பின்பு சுதந்திரப் போராட்ட தியாகியின் மனைவி என்பதன் அடிப்படையில் அரசு சார்பில் வழங்கப்படும் உதவித் தொகையைப் பெற்று இவர் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக இவர் சேமித்து வைத்திருந்த தொகையிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணத்திற்கான காசோலையை கோவை வடக்கு மாவட்ட காரமடை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்எம்டி கல்யாணசுந்தரத்திடம் வழங்கியுள்ளார்.

மேலும் முதலமைச்சரின் செயல்பாடு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் மூதாட்டி கன்னியம்மாள் தெரிவித்துள்ளார்.

98 வயது மூதாட்டியும் சுதந்திர போராட்ட தியாகியின் மனைவியுமான கன்னியம்மாள் அவரது சேமிப்பு பணத்தில் இருந்து பத்தாயிரம் ரூபாயை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்காக வழங்கியது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details