தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் 5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல்... அரசுப் பள்ளி ஆசிரியர் கைது... - 5th std student Sexual harassment

கோயம்புத்தூரில் 5ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

government-school-teacher-arrested-for-sexually-harassing-5th-std-student-in-coimbatore
government-school-teacher-arrested-for-sexually-harassing-5th-std-student-in-coimbatore

By

Published : Mar 22, 2022, 7:46 AM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அன்னூர் பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு சென்ற சிறுமியிடம், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து சிறுமி தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், தலைமை ஆசிரியர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவலர்கள் விசாரணையில் ஈடுபட்டு, ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை உறுதிபடுத்தினர். அந்த வகையில், ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அண்மைகாலமாக, கோவையில் பாலியல் வழக்குகள் அதிகரித்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: பிப். 24ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ABOUT THE AUTHOR

...view details