கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சுங்கத்துறை அலுவலர்கள் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சார்ஜாவிலிருந்து வந்த ஏர் அரேபியா விமானப் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. அந்தச் சோதனையில், இரண்டு பயணிகளிடம் ரூ. 62.66 லட்சம் மதிப்புள்ள 1.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.09 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்! - கோயம்புத்தூர் விமான நிலையம்
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1.09 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் சுங்கத்துறை அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டது.
gold worth Rs 1.09 crore seized
அதே விமானத்தில் வந்த மேலும் 5 பயணிகளிடம் ரூ. 46 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது. இதன்படி மொத்தம் ரூ.1.09 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க:ஒடிசாவில் 6.5 கிலோ திருட்டு தங்க நகைகள் பறிமுதல்; 15 பேர் கைது