கோயம்புத்தூர்: சார்ஜாவிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு நேற்று (ஆகஸ்ட் 9) ஏர் அரேபியா விமானம் வந்தது. அதிலிருந்து வந்த பயணிகளை அங்கிருந்த சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, ராமசாமி சேகர், தர்ம அருள்நேதாஜி ஆகிய இருவரையும் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனை செய்தபோது, இருவரும் ஆடைக்குள் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.