Mapping
கோவை மாவட்டம் துடியலூர் அருகே பன்னிமடையில் கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், சிறுமியின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட விந்தணுவானது, டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனையில், இருவருடைய விந்தணுக்கள் இருப்பதும், அதில் ஒன்று சந்தோஷ்குமாருடையது என்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் முடிவில், கடந்த 2020ஆம் டிசம்பர் 27ஆம் தேதி குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டணை விதிக்கப்பட்டதோடு, இதில் தொடர்புடைய மற்றொரு நபர் யார் என்பது குறித்து துடியலூர் மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சந்தோஷ்குமார், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டணையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிரகாஷ், சிவஞானம் ஆகிய இருவரும் இன்று (மார்ச் 06) பன்னிமடை கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இறந்த சிறுமியின் வீடு, அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்களிடம் நீதிபதிகள் விசாரணையில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:பெரம்பலூர்: நன்னடத்தை விதிகளை மீறிய 2 ரவுடிகள் சிறையில் அடைப்பு