கோவை: பொள்ளாச்சியை அடுத்த கருமாபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவம். இவரது உறவினர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை பார்க்கும் மாணிக்கம் என்பவரது உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணிக்கத்தின் மனைவி தாலுகா போலீசாரிடம் கொடுத்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக, மாணிக்கத்துக்கும் பரமசிவத்துக்கும் இடையே இருந்த தகராறு முற்றிய நிலையில் மாணிக்கம், பரமசிவத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
பரிசோதனை: இது தொடர்பாக பரமசிவம் கொடுத்த புகாரின் பேரில், தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்தை விசாரணைக்காக அழைத்து சென்றனர். விசாரணையின் முடிவில் மாணிக்கத்தை கைது செய்வது என போலீசார் முடிவு செய்தனர். மருத்துவ பரிசோதனை அறிக்கை பெறுவதற்காக மாணிக்கத்தை போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.