ஈரோடு மாவட்டம் பெருந்துறை மடத்துப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், பூபதி, அபிநயா, இவர்களது நண்பர்களானா கோபியை சேர்ந்த சேர்ந்த குமார் ஆகியோருடன் இணைந்து தீரன் பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற நாட்டுக்கோழி பண்ணை நிறுவனத்தை தொடங்கினர்.
அந்த நிறுவனத்தின் பண்ணை திட்டத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், ஷெட் அமைத்து கொடுத்து, 900 நாட்டுக்கோழிகுஞ்சுகள் அளிப்பதோடு, அதற்கு தேவையான தீவணங்கள், மருந்துகள் வழங்குவதோடு மட்டுமல்லாமல் மாதந்தோறும் பராமரிப்புத்தொகையாக ரூ.12 ஆயிரம், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.16 ஆயிரம் அளிப்பதாக விளம்பரம் செய்தனர்.
மேலும் இரண்டாவது திட்டத்தில், ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால், நிறுவனமே 700 நாட்டுக்கோழிக்குஞ்சுகளை பராமரித்து, முதலீட்டாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் அளிக்கும் எனவும், ஆண்டு முடிவில் ஊக்கத்தொகையாக ரூ.12 ஆயிரம் அளிப்பதாகவும், 3 ஆண்டுகால ஒப்பந்தம் செய்துகொள்வோம் எனவும் விளம்பரம் செய்தனர்.
இதை நம்பி, 14 பேர் ரூ.33.30 லட்சம் முதலீடு செய்தனர். ஆனால், உறுதி அளித்தபடி பராமரிப்புத்தொகை, ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்காமல் உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர்.