தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒரே காவல் நிலையத்தைச் சேர்ந்த 4 காவலர்களுக்கு கரோனா தொற்று - covid cases in coimbatore

கோயம்புத்தூரில் ஒரே காவல் நிலையத்தைச் சேர்ந்த நான்கு காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

police officers infected with corona virus
4 காவலர்களுக்கு கரோனா தொற்று

By

Published : Jan 9, 2022, 8:41 AM IST

கோயம்புத்தூர்: நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வரும் சூழலில், பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கோயம்புத்தூர் காட்டூர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு ஜனவரி 7ஆம் தேதி கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் இரண்டு உதவி ஆய்வாளர்கள், ஒரு தலைமை காவலர் மற்றும் ஒரு காவலர் என நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அறிகுறிகள் இல்லாமல் தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக நால்வரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு கிருமிநாசினி தெளித்தனர்.

காவலர்கள் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் காவல் நிலையத்தில் பணிபுரிபவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: நிறம் சேர்க்கப்பட்ட குடல் அப்பளம், வடகம், வத்தல் தரத்தை உறுதிசெய்ய அரசு நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details