தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவை அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகள்

கோவை அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரியும் காட்டு யானைகள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

யானை
யானை

By

Published : Jun 13, 2022, 12:51 PM IST

கோவை: பேரூர் அடுத்த தீத்தி பாளையம் கிராமம் குட்டைதோட்டம் அருகில் தாமோதரன் என்பவருக்கு சொந்தமான நிலத்திற்குள் நேற்று (ஜூன்12) இரவு 5-க்கும் மேற்பட்ட யானைகள் புகுந்தன. அங்கிருந்த பயிர்களை சேதப்படுத்தியதோடு, வீடு ஒன்றையும் துவம்சம் செய்தது. இதுகுறித்த தகவலை தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்றனர். ஆனால் இதுகுறித்து வனத்துறையினர் அங்கு வருவதற்குள் பின் அவைகள் கலைந்து சென்றன.

இந்நிலையில் இன்று (ஜூன்13) அதிகாலையில் காளம்பாளையத்திலிருந்து மலைக்குச் சென்று கொண்டிருந்த 6 யானைகளில் ஒரு யானை மட்டும் வழி தவறி வேளாங்கண்ணி குடியிருப்பு பகுதிக்குள் சென்றது. மற்ற 5 யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், ஒரு யானை மலைப்பகுதிக்குச் செல்லாமல் குடியிருப்பு பகுதியில் நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

குடியிருப்புகளுக்குள் நுழைந்த காட்டு யானைகள்

குடியிருப்புகளுக்குள் சுற்றி திரியும் யானையை வனத்திற்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வனத்துறையினர் அந்த ஒரு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கொடுங்கையூர் விசாரணை கைதி சந்தேக மரணம்: இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேர் பணியிடை நீக்கம்..

ABOUT THE AUTHOR

...view details