கோயம்புத்தூர்: கோவை வனக் கோட்டத்தில் வனச்சரகராகப் பணியாற்றிவருபவர் சிவா. இவர் யானைகளை விரட்டும் சிறப்புக் குழுவான ராபிட் ரெஸ்பான்ஸ் (rapid response team) குழுவில் பணிபுரியும் ஒப்பந்த வனஊழியர் ஒருவரைத் தகாத வார்த்தைகளால் திட்டியது போன்ற ஆடியோ உரையாடல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அந்த ஆடியோவில், வனத்துறைக்குச் சொந்தமான ஜீப் ஒன்று பஞ்சர் ஆனது தொடர்பாக தற்காலிக வன ஊழியர் ஒருவர் விளக்கம் அளிப்பது போலவும், அதற்கு வன சரகர் சிவா ஜீப் என்ன ஆனது என கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டியும், யாரும் பணியில் இருக்க மாட்டீர்கள் என மிரட்டுவது போன்று உரையாடல் பதிவு இடம் பெற்றுள்ளது.