தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மின்சார ஊழியர்கள் குடியிருப்புப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டுயானை - விரட்டும் பணியில் வனத்துறையினர் - மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் மின்சார ஊழியர்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மின்சார ஊழியர்கள்
மின்சார ஊழியர்கள்

By

Published : Feb 11, 2022, 1:09 PM IST

கோயம்புத்தூர்:ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரகம் நவமலையில் மின்சார ஊழியர்கள் குடும்பத்தார் மற்றும் மலைவாழ் மக்கள் என 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

இப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டுயானைகள் அடிக்கடி இங்கு வருகை தருகின்றன.

இதைத்தடுக்கும் விதமாக வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்புக்காவலர்கள் வாகன ரோந்துப்பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று மாலை(பிப்.10) குடியிருப்பு பகுதிக்குள் திடீரென ஒற்றைக்காட்டு யானை ஒன்று உலா வந்தது.

மின்சார ஊழியர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றைக்காட்டு யானை

இதனையடுத்து குடியிருப்புவாசிகள் வனத்துறைக்குத் தகவல் அளித்ததன் பேரில், வனத்துறையினர் ஒற்றைக்காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் யானை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.

கடந்த சில தினங்களாக சின்னார் பதிமலைவாழ் மக்கள் குடியிருப்புப்பகுதிகளிலும், கவி அருவி, வால்பாறை சாலைப் பகுதிகளிலும் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புத்தகப்பைகள் இல்லாத தினம் ரத்து

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details