தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கோவையில் இருந்து திருப்பதிக்கு சிறப்பு பேருந்து

கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பதி சுறறுலாவுக்கு முதல் முறையாக சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 13, 2022, 10:15 AM IST

கோயம்புத்தூர்:தமிழ்நாடு அரசு, சுற்றுலா துறை சார்பில் கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் சிறப்பு பேருந்து வசதியை ஏற்பாடு செய்துள்ளது.

இத்திட்டத்தின் அறிமுகமாக முதல் பேருந்தை மாவட்ட ஆட்சியர் காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அனைவருக்கும் சிற்றுண்டி அடங்கிய பைகளையும் வழங்கினார்.

இத்திட்டம் 4000 ரூபாய் கட்டணத்தில் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து விட்டு மீண்டும் திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. இக்கட்டணத்தில் உணவுகள், அறைகள் (for refresh), கோயில் உட்பிராகாரங்களை சுற்றி காண்பிக்க வழிகாட்டி ஒருவர் போன்ற சிறப்பு வசதிகள் அடங்கும்.

கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பதிக்கு முதல் முறையாக சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

இதில் செல்ல விரும்புவோர் www.ttdconline.com என்ற தளத்தில் புக்கிங் செய்து கொள்ளலாம் அல்லது காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டலில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். திட்டத்தின் தொடக்கமாக தற்போது சீட்டிங்(non sleeping) பேருந்து மட்டும் விடப்பட்டுள்ளது.

அரசு சார்பில் கோவையில் இருந்து திருப்பதிக்கு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நெல்லைச்சீமையில் பாரதி பயின்ற பாடசாலையில் படிக்கும் தீரமிக்க பாவையர்

ABOUT THE AUTHOR

...view details