தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

முதல் பட்டதாரி பழங்குடி பெண்ணின் சீரிய முயற்சி: கரோனா ஒரு தடையல்ல! - கோவை சந்தியா

பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த முதல் பட்டதாரி பெண், அக்கிராம சிறுவர் சிறுமியருக்கு வகுப்புகளை எடுத்து பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்.

கோயம்புத்தூர் செய்திகள்
கோயம்புத்தூர் செய்திகள்

By

Published : Jun 18, 2021, 9:02 AM IST

கோயம்புத்தூர்: வாளையார் பகுதியில் உள்ள சின்னாம்பதி என்ற பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியா.

இவர் க.க.சாவடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டம் முடித்தவர் (B.com CA). சந்தியா கல்லூரியில் படிக்கும்பொழுது அக்கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்குப் பாடம் சொல்லித் தருகிறார். விடுமுறை நாள்களில் சிறார், சிறுமிகளுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பாராம்.

இவரது செயலைப் பார்த்து அவரை ஊக்குவிக்கும் வண்ணம் எட்டிமடைப் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, கிராம குழந்தைகளின் சிறப்பு வகுப்பிற்குக் குறிப்பிட்ட நிதியையும் வழங்கியுள்ளனர்.

இச்சூழலில், கடந்தாண்டு முதல் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. அன்றிலிருந்து இன்றுவரை கிராமத்தில் உள்ள சிறுவர் சிறுமியர்களுக்குச் சந்தியா சிறப்பு வகுப்புகளை எடுத்துவருகிறார்.

பள்ளி வகுப்பு நேரங்களைப் போலவே காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும், மாலை 3 மணிமுதல் 6 மணிவரையிலும் வகுப்புகளை எடுத்துவருகிறார். அவர் வசிக்கும் கிராமத்தில் உள்ள மக்கள் பலரும் படிப்பறிவு இல்லாத நிலையில், இவரது வகுப்புகளுக்கு அவர்களது குழந்தைகளை ஆர்வமுடன் அனுப்பிவைக்கின்றனர்.

குழந்தைகளும் ஆர்வமுடன் வந்து பாடங்களைக் கற்றுவருகின்றனர். இவர் ஆங்கிலத்திற்கும் கணிதப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துவருகிறார்.

பழங்குடி மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும் சந்தியா

பேருந்து வசதி, மின்சார வசதி, தொலைத்தொடர்பு வசதி போன்றவை குறைவாக இருக்கும் பழங்குடியினர் கிராமத்தில் பட்டதாரி பெண் ஒருவர், அக்கிராம குழந்தைகளுக்குப் பள்ளி பாடங்களைக் கற்றுத் தருவது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி அக்கிராமத்தில் சந்தியாதான் முதல் தலைமுறை பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details