தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாதாள சாக்கடைக்காக வைக்கப்பட்டிருந்த குழாய்களில் தீ பிடிப்பு - பாதாள சாக்கடை குழாய் தீ பிடிப்பு

கோவை: பாதாள சாக்கடைக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்கள் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குழாய்களில் தீ பிடித்து எரியும் காட்சி
குழாய்களில் தீ பிடித்து எரியும் காட்சி

By

Published : Mar 23, 2020, 8:41 PM IST

சில தினங்களுக்கு முன்பு போத்தனூர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக நிலம் தோண்டப்பட்டது. அதனால் அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அங்கு திடீரென தீ பிடித்ததில், அனைத்து குழாய்களிலும் தீ பரவியது. பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் எவ்வாறு தீ பிடித்தது என்று விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியே கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாகக் காட்சியளித்து. மேலும் அப்பகுதி மக்கள் வசிக்கும் பகுதி இல்லாததால் மக்களுக்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

குழாய்களில் தீ பிடித்து எரியும் காட்சி

பின்னர், தீ பிடிக்காத குழாய்களை அப்பகுதி மக்களும் தீயணைப்புத் துறையினரும் அகற்றினர்.

இதையும் படிங்க:கரோனா: ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் இரவுக்குள் முடிவடையும் - விஜயபாஸ்கர்!

ABOUT THE AUTHOR

...view details