தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விபத்துகளை குறைக்கத்தான் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர் - விபத்துகளை குறைக்கத்தான் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது

கோயம்புத்தூர்: விபத்துக்களைக் குறைப்பதற்காகத் தான் இந்தியா முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் அதிகரித்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

Fines increased for reduce accidents - Minister Vijayabaskar

By

Published : Aug 31, 2019, 11:59 PM IST

அகில இந்திய போக்குவரத்துத் துறை தொழில்நுட்ப அலுவலர்கள் சங்கம் சார்பில் கோயம்புத்தூர் அவினாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரும், ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணியும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைத்து விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இது போன்ற கருத்தரங்குகள் நடத்தப்படுவதாகவும், விபத்துக்களைக் குறைப்பதற்காகத் தான் இந்தியா முழுவதும் சாலை போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் அதிகரித்துள்ளதாகவும் விளக்கமளித்தார்.

போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தப் போது..!

மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் கூடிய விரைவில் 525 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details