கோயம்புத்தூர்: கோவை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வெளி நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அதே போல் விபத்து, நோய் தொற்று காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (நவ.30) அங்குள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவு கழிவறையில், பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை இறந்த நிலையில் இருப்பது தெரிய வந்தது. இதைனைத் தொடர்ந்து அக்குழந்தையின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் கழிவறையிலிருந்து மீட்டனர்.