தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 26, 2021, 7:03 AM IST

ETV Bharat / city

பெண்களின் இடுப்பு குறித்து பேசிய லியோனியின் மீது புகார்

கோவை: தேர்தல் பரப்புரையின்போது பெண்களின் இடுப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

பெண்களின் இடுப்பு குறித்து பேசிய லியோனியின் மீது புகார்
பெண்களின் இடுப்பு குறித்து பேசிய லியோனியின் மீது புகார்

கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து மார்ச் 23ஆம் தேதி பட்டிமன்றப் புகழ் லியோனி, குனியமுத்தூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "ஒருகாலத்தில் எட்டுப் போல இருந்த பெண்களின் இடுப்பு, தற்போது பேரல் போல மாறிவிட்டது" என்று தெரிவித்தார். இவரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை, கோபாலபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுபாஷினி பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

வானதி சீனிவாசன் கண்டனம்
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் முன்னதாக லியோனியின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது, பெண்களை இழிவுப்படுத்தி பார்ப்பது திமுகவின் வாடிக்கையான செயல் என்றும், பரம்பரை குணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ABOUT THE AUTHOR

...view details