தமிழ்நாடு

tamil nadu

தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்த திட்டம் - விவசாயிகள் எதிர்ப்பு

By

Published : Nov 1, 2021, 6:52 PM IST

கோயம்புத்தூர் அன்னூர் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

கோயம்புத்தூர்:அன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொழிற்பேட்டை அமைக்க நான்கு வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இரண்டு வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் சுமார் ஆயிரத்து 504 ஹெக்டர் பரப்பளவுள்ள நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை தமிழ்நாடு நில கையகப்படுத்தல் சட்டத்தின்கீழ் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர் வாயிலாக டிட்கோவின் முதன்மை இயக்குநர் தமிழ்நாடு அரசிடம் கூறியிருந்தார்.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமுக்கு வந்த அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தொழிற்பேட்டை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தடை செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

விவசாயிகள் எதிர்ப்பு

பின்னர், தங்களது கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக வழங்கினர். அதில், “அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது. இங்கு நடைபெறும் விவசாயப்பணிகள் நம்பியே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

முதலமைச்சர் கவணத்திற்கு சென்ற மனுக்கள்

எங்களின் 70 ஆண்டு கனவு திட்டமான அவிநாசி அத்திக்கடவு திட்டத்தால் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வரும் என நினைத்து இருந்த நிலையில், விவசாயிகள் நிலம் கையகப்படுத்துதல் என்பதற்கான முயற்சி எங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்ற தீர்மானம் ஐந்து ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் நிலம் கையகப்படுத்தபடமாட்டாது; தொழிற்பேட்டை ரத்து என்ற சட்ட பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

இதையும் படிங்க:டீசல் விலை உயர்வைக் கண்டித்து விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம்

ABOUT THE AUTHOR

...view details