தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'விவசாயத்தைக் காப்பாற்றுங்கள்': சார் ஆட்சியரிடம் விவசாயிகள் மனு! - விவசாயிகள் மனு

கோவை: பொள்ளாச்சி கிருஷ்ணாகுளம் கழிவுநீரால் 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வீண் ஆவதால், விவசாயத்தைக் காப்பாற்றக்கோரி, விவசாயிகள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Farmers Petition To Pollachi Sub Collector
Farmers Petition To Pollachi Sub Collector

By

Published : Jun 30, 2020, 2:18 AM IST

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளியில் கிருஷ்ணாகுளம் அருகில் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன விவசாயிகளின் விவசாயத்துக்குப் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

பொள்ளாச்சியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரூ.120 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டம் தொடங்கப்பட்டநிலையில், அங்கு தற்பொழுது 70% பணிகள் முடிந்துள்ளன.

பொள்ளாச்சி சுற்று வட்டாரப்பகுதிகளிலிருந்து செல்லும் கழிவுநீர் கிருஷ்ணாகுளத்தில் கலந்து, அங்கிருந்து கேரளா வரை சென்று, 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்படைகின்றன.

ஆனால், ஆளுங்கட்சி பிரமுகர்கள் கழிவுநீரை சுத்திகரித்து குழாய்கள் மூலம், தனது சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல உள்ளனர்.

இதைத் தடுத்து விவசாயிகள் நலன் காக்க வேண்டும் என விவசாயிகள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதையும் படிங்க:தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன - அமைச்சர் காமராஜ்

ABOUT THE AUTHOR

...view details