தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உறவினர்கள் புடை சூழ செல்லப்பிராணிக்கு வளைகாப்பு! - செல்லப்பிராணிக்கு வளைக்காப்பு

பொள்ளாச்சி அருகே மகளாக வளர்த்து வரும் டாபு என்ற பாசமான நாய்க்கு, ஏழு வகையான சாப்பாட்டுடன் வளைகாப்பு நடத்தி விவசாய குடும்பம் ஒன்று மகிழ்ச்சி அடைந்துள்ளது நம்மை வியப்படைய செய்கிறது.

டாபுவிற்கு வளைக்காப்பு
டாபுவிற்கு வளைக்காப்பு

By

Published : Mar 31, 2022, 7:46 PM IST

கோவை:பொள்ளாச்சி அருகே திவான்சாபுதூர் பகுதியில் வசிப்பவர், விவசாயி சிவகுமார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவியும், சுகன்யா என்ற மகளும், ஹரிஹரசுதன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு பொமேரியன் வகையான பெண் நாய்க்குட்டி ஒன்றை வாங்கி இக்குடும்பத்தினர் வளர்த்து வந்தனர்.

செல்லப்பிராணிக்கு டாபு என்ற பெயர் வைக்கப்பட்டு வீட்டில் ஒரு மகளாகவே வளர்த்து வரும் மகாலட்சுமிக்கு, வீட்டில் தனியாக இருக்கும்போது துணையாகவும், பாதுகாப்பாகவும், டாபு இருந்து வருகிறது. தற்போது டாபு நாய் கருவுற்ற பிறகு, வளைகாப்பு செய்ய ஆசைப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் பாசமாக வளர்த்த நாய் கருவுற்றநிலையில், டாபுவுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் டாபுவுக்கு விவசாயி சிவகுமார், மகாலட்சுமிக்கு நெருங்கிய சொந்தங்களை அழைத்து, தன் மகளுக்கு செய்யும் முறையில் தயிர், புளி, தக்காளி உள்ளிட்ட 7 வகையான சாப்பாடு செய்து உறவினர் முன்னிலையில் பொட்டு வைத்து, மலர்த்தூவி வளையல் அணிவித்து, சாப்பாடு ஊட்டி விட்டு வளைகாப்பு செய்த நிகழ்ச்சி அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

செல்லப் பிராணிக்கு வளைகாப்பு

தங்களின் வீட்டிற்குப் பாதுகாப்பாகவும், தங்கள் குடும்பத்தில் ஒரு வாரிசாகவும் உள்ள டாபுவுக்கு வளைகாப்பு நடத்தி, குட்டி ஈன்று நல்ல ஆயுளுடன் இருக்கவேண்டும் என வளைகாப்பு நடத்தியுள்ளதாக சிவகுமார் குடும்பத்தினர் தெரிவித்தனர். பெற்ற மகளுக்கு நடத்தப்படும் வளைகாப்பு போல் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் வளைகாப்பு நடத்திய விவசாயி குடும்பத்தினரின் பாசம் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: அள்ளிக்கொண்டது திமுக ! கூட்டணிகளுக்கு பெப்பெ...!

ABOUT THE AUTHOR

...view details