பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்.ஐ.ஜி. காலனியைச் சேர்ந்தவர் மாரிமுத்துக்குமார் (60). இவர் முறையான கல்விச் சான்றிதழ்கள் இல்லாமல் சித்த வைத்தியச் சிகிச்சை அளித்துவந்துள்ளார். சிறுநீரகக் கல், மஞ்சள் காமாலை, குழந்தையின்மை போன்ற நோய்களுக்கு சிகிச்சையளித்து வந்த இவர், மருந்துகளுக்கு மட்டும் கட்டணம் பெற்றுள்ளார்.
கோவை மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் அதிகரித்துவருவதாக எழுந்த புகாரையடுத்து, மாவட்ட சித்த மருத்துவ இயக்குநர் தனம் சோதனையில் ஈடுபட்டார். அப்போது பொள்ளாச்சியில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா, இயக்குநர் தனம் ஆகியோர் அலுவலர்களுடன் சென்று மாரிமுத்துக்குமாரை விசாரித்தபோது முறையான கல்விச்சான்று இல்லாமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது.