கோவை:மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC) நடத்திய 2021ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வில்(Civil Services Examinations) அகில இந்திய அளவில் 46ஆவது இடத்தையும் தமிழ்நாடு அளவில் 2ஆவது இடத்தையும் பெற்று சாதனைப் படைத்த கோவை காட்டூரைச் சேர்ந்த ரம்யா, இன்று (மே 30) நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.
Exclusive: ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த ரம்யா பிரத்யேகப்பேட்டி! - ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் 2ஆம் இடம் பிடித்த ரம்யா பிரத்யேகப்பேட்டி
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 46ஆவது இடத்தையும் தமிழ்நாடு அளவில் 2ஆவது இடத்தையும் பிடித்து சாதனை படைத்த கோவை காட்டூரைச் சேர்ந்த ரம்யா, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற ரம்யா(30) நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தன் தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தவர். அதன்படி, அவரை வளர்த்து ஆளாக்கிய அவரது தாயாருக்கும் தமிழ்நாட்டிற்கும் தற்போது இதன்மூலம் பெருமை சேர்த்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் ஒன்றில் வேலை புரிந்துகொண்டே வீட்டையும் பார்த்து கவனித்துக்கொண்டு வந்தநிலையில், 2021ஆம் ஆண்டு நடந்த யுபிஎஸ்சி தேர்வில் தனது அயராத உழைப்பில் 6ஆவது attempt-ல் வெற்றி பெற்றுள்ளார். தோல்விகள் பல வந்தாலும் துவண்டுவிடாத மனம் கொண்டவருக்கே வாழ்க்கையில் வெற்றி நிச்சயம் என்பதை இந்தியாவிற்கே வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார், இந்த தமிழ்நாட்டுப் பெண் ரம்யா.