தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Exclusive: ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த ஸ்வாதிஸ்ரீ பிரத்யேகப்பேட்டி! - ஸ்வாதி ஸ்ரீ ஐஏஎஸ் தேர்வில் 42வது இடம் பெற்று தேர்ச்சியானவர்

சிவில் சர்வீசஸ் தேர்வில்(Civil Services Examinations) நாட்டில் 42ஆவது இடத்திலும் மாநில அளவில் முதல் இடமும் பெற்ற ஸ்வாதிஸ்ரீ, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளார்.

ஸ்வாதி ஸ்ரீ
ஸ்வாதி ஸ்ரீ

By

Published : May 30, 2022, 7:38 PM IST

Updated : May 30, 2022, 10:43 PM IST

கோவை:மத்திய அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் (Union Public Service Commission - UPSC) நடத்திய 2021ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு (Civil Services Examinations) முடிவுகள் இன்று (மே 30) வெளியாகின.

இந்தத் தேர்வில், ஸ்வாதிஸ்ரீ என்பவர் அகில இந்திய அளவில் 42ஆம் இடத்தைப் பிடித்தும் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்தும் சாதனைப் படைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் இந்த சிவில் சர்வீசஸ் தேர்வை கடந்த 2021ஆம் ஆண்டு எழுதியிருந்த நிலையில் கோவையைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ, இந்தத் தேர்வில் அகில இந்திய அளவில் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் 42ஆவது இடத்தைப் பிடித்தும், மாநில அளவில் முதலிடத்தைப்பிடித்தும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

முன்னதாக, ஸ்வாதிஸ்ரீ யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வில் 126ஆவது இடத்தைப் பிடித்து இந்திய வருவாய்த்துறையில்(Indian Revenue Services - IRS) பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த ஸ்வாதிஸ்ரீ

இது குறித்து ஸ்வாதிஸ்ரீ, ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், 'யுபிஎஸ்சி தேர்வை 3ஆவது முறையாக எழுதியதில் 42ஆவது இடம் பெற்றுள்ளேன். நான் பிஎஸ்சி அக்ரிகல்சர் (B.Sc - Agriculture) படித்துள்ளேன்.

இனிப்பை பகிர்ந்துகொள்ளும் ஸ்வாதிஸ்ரீயின் தாயார்

இதற்கு முன் நான், இதே தேர்வில் 126ஆவது இடத்தைப் பிடித்து IRS-IT-ல் இருந்தேன். இருப்பினும் என்னுடைய குறிக்கோளான IASஆவது என்பதனால், திரும்பவும் 2021ஆம் ஆண்டு யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வை எழுதி 42ஆவது இடத்தைப் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளேன்.

ஊட்டி தான் எனக்கு சொந்த ஊர். எனது அம்மா, ஓய்வு பெற்ற போஸ்டல் அசிஸ்டென்ட் ஆவார். எனது அப்பா, பிசினஸ்மேன்.

தாயார் லட்சுமியுடன் ஸ்வாதிஸ்ரீ

என்னுடைய கனவு பற்றி தெரிந்துகொண்டு எனக்கு உதவியாக இருந்த என் பெற்றோர், சகோதரிகள், நண்பர்கள் மற்றும் குறிப்பாக எனக்கு சிறந்தமுறையில் வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

கல்லூரியில் அக்ரிகல்சர் படித்ததால் அக்ரி சார்ந்த துறைக்கு ஒரு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்றுதான் சிவில் சர்வீஸ் தேர்வை தேர்ந்தெடுத்தேன். அதற்கு IAS-ஆக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதாலேயே என்னுடைய குறிக்கோள் IAS-ஆவது என்று இருந்தது. தற்போது IAS தேர்வில் நான் தேர்ச்சி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

கோவையைச் சேர்ந்த ஸ்வாதி ஸ்ரீ ஐஏஎஸ் தேர்வில் மாநில அளவில் முதலிடம்

இதையும் படிங்க: UPSC தேர்வு முடிவு வெளியீடு; முதல் மூன்று இடங்களில் பெண்கள் ராஜ்ஜியம்.. 42ஆவது இடத்தில் தமிழ்நாடு!

Last Updated : May 30, 2022, 10:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details