தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்தி எதிர்ப்பில் அதிமுக உறுதியாக உள்ளது - எஸ்.பி. வேலுமணி

இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

EX Minister SP Velumani, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி
EX Minister SP Velumani

By

Published : Jan 25, 2022, 6:22 PM IST

Updated : Jan 25, 2022, 11:06 PM IST

கோயம்புத்தூர்:கோயம்புத்தூர் அதிமுக அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இன்று (ஜனவரி 25) நடைபெற்றது.

இதில், கோயம்புத்தூர் மாவட்ட அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மன் கே.அர்ஜூனன், அருண் குமார், சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு, தியாகிகளின் புகைப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினர்.

அதிமுகவின் இந்தி எதிர்ப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி, "அதிமுக, தமிழ் மொழிக்காக உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு எப்போதும் அஞ்சலி செலுத்தி உரிய மரியாதை வழங்கி வருகிறது.

இந்த மொழிப்போரில் கோவை மாவட்டம் முக்கியப் பங்காற்றி உள்ளது. பொள்ளாச்சி உட்படப் பல பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர் சந்திப்பு

பல்வேறு போராட்டங்களை அண்ணா நடத்தியதால் அப்போது திமுக ஆட்சி அமைந்தது. அதனைத்தொடர்ந்து, அதிமுக வீர மறவர்களுக்கு இப்போது வரை அஞ்சலி செலுத்தி வருகிறது. தற்போது வரையிலும் அதிமுக இந்தி எதிர்ப்பு நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

அதிமுகவை களங்கப்படுத்தும் திமுக

அதனைத்தொடர்ந்து பேசிய கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார், "வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் வீட்டில் அவரை களங்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தற்போது பொறுப்பிலுள்ள அமைச்சரின் தூண்டுதலின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியுள்ளது.

நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக வெற்றியைப் பாதிக்கவும், தேர்தல் பணிகளை முடக்க வேண்டும் என்பதற்காகவே சோதனை நடத்தி உள்ளனர்.

முன்னாள் அமைச்சரின் வீடுகளில் இருந்து தற்பொழுது ஒன்றியச் செயலாளர் வரை திமுக அரசு சோதனை நடத்தி வருகிறது. அதனை சட்டரீதியாக எதிர்கொள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Last Updated : Jan 25, 2022, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details