தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

எஸ்டேட் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு நிவாரணம் - Valpari Estate labour fund

கோவை: வால்பாறை அடுத்த பிபிடீசி நிறுவனத்திற்கு சொந்தமான தாய் முடி எஸ்டேட் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு நிவாரணம் வழங்கினர்.

எஸ்டேட் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு நிவாரணம்
எஸ்டேட் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு நிவாரணம்

By

Published : Jun 22, 2021, 6:32 PM IST

வால்பாறையை அடுத்த பிபிடீசி நிறுவனத்திற்கு சொந்தமான தாய் முடி முதல் பிரிவு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியை வட்டாட்சியர் ராஜாவிடம் வழங்கப்பட்டது.

அப்பகுதியில் பணிபுரியும் திமுக பொறுப்பாளர்கள், முன்னாள் கவுன்சிலர் பூங்கொடி தலைமையில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் தங்களது ஒருநாள் கூலியை சேகரித்து ரூ. 30,000 வழங்கினர்.

இதனைப் பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் ராஜாவிடம் தொழிலாளர்கள் தங்களுடைய குழந்தைகளின் படிப்புக்குத் தேவையான பிஎஸ்என்எல் நிறுவனம் நெட்வொர்க்கை சரியான முறையில் வழங்காததாலும் சாலைப் பணிகள் பாதியுடன் நிறுத்தப்பட்ட உள்ளதையும் எடுத்துரைத்தனர். இந்தப் பணிகளை விரைவில் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியர் உறுதி அளித்தார்.

கடந்த வாரம் தாய் முடி எம்டி பகுதியிலும் தற்போது தாய் முடி இரண்டாவது, மூன்றாவது பிரிவுகளில் இன்று மட்டும் 45 ஆயிரம் ரூபாய் வழங்கிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் வட்டாட்சியர் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details