தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகுவது தான் திராவிட மாடல்...எடப்பாடி பழனிச்சாமி காட்டம் - AIADMK internal party divorce

திமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் விலகுவது தான் திராவிட மாடல் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 21, 2022, 8:18 AM IST

கோயம்புத்தூர்: டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்தித்து "முக்கியமான சில விஷயங்கள் குறித்து பேசினோம். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் விரைந்து செயல்படுத்த வேண்டும், நடந்தாய்வாழி காவிரி திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம்.

தமிழகத்தில் போதை பொருள் அனைத்து பகுதியிலும் தடையில்லாமல் கிடைக்கிறது. இது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், திமுகவிலிருந்து முக்கிய தலைவர்கள் ஒவ்வொருவரும் விலகுவது தான் திராவிட மாடல். இந்து மதத்தை ஆ.ராசா கீழ்தராமாக பேசுவது கண்டிக்கதக்கது.

ஆ.ராசா குறிப்பிட்டு பேசிய அந்த வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா ? அல்லது அவரது மருமகன் திருச்செந்தூரில் யாகம் நடத்தினாரே அவருக்கும் பொருந்துமா என்று கேட்டேன். இன்னும் அவரது கட்சி தலைவர் உரிய பதிலளிக்கவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாகவும், நீதிமன்ற தீர்ப்பு வரும் போது நீங்களே தெரிந்து கொள்வீரகள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது அதை பற்றி பேசினால் அது வழக்கிற்கு தடையாக இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், நான் டெல்லிக்கு சென்று உட்கட்சி விவகாரம் குறித்து பேசியதாக கூறுவது தவறானது.

விடியா திமுக ஆட்சியில் எதுவும் நடைபெறாமல் இருப்பது குறித்தும், பல்வேறு கோரிக்கைகளை வைக்கதான் டெல்லி சென்றேன். தமிழகத்தில் காய்ச்சல் பரவலைக் தடுக்க இந்த அரசு விழிப்போடு இருக்க வேண்டும்.

மருத்துவகுழு உரிய முறையில் ஆராய்ந்து காய்ச்சல் பரவலைக் தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் " என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 2,50,000 புத்தகங்கள்.... மதுரையில் பிரமாண்டமாக தயாராகும் கலைஞர் நூலகம்..

ABOUT THE AUTHOR

...view details