தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வனப்பகுதியிலிருந்து குளத்திற்குள் இறங்கிய யானைகள் - Poluvampatti Wildlife Sanctuary

வனப்பகுதியிலிருந்து வெளியே வந்த யானைகள் குளத்தில் இறங்கின. இதையடுத்து யானைகளை மீட்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

குளத்திற்குள் இறங்கிய யானைகள்.. மீள முடியாமால் தவிப்பு..
குளத்திற்குள் இறங்கிய யானைகள்.. மீள முடியாமால் தவிப்பு..

By

Published : Jun 15, 2021, 1:51 PM IST

கோவை: போளுவாம்பட்டி வனச்சரகத்திலிருந்து இரண்டு காட்டு யானைகள் முட்டத்து வயல் பகுதியில் உள்ள குளத்தில் இறங்கியது. இந்த யானைகள் தாணிகண்டி எனும் பழங்குடியினர் குடியிருப்பு வழியாக இந்தக் குளத்திற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகவலறிந்த அங்கு வந்த வனத் துறையினர் யானைகளைக் கண்காணித்தனர். அதனைத் தொடர்ந்து வனத் துறை பணியாளர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து குளத்தைச் சுற்றிலும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். அக்குளத்திலிருந்து யானைகளை வெளியேற்றவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

மீள முடியாமல் தவிக்கும் யானைகள்

இது குறித்து வனத் துறையினர் கூறுகையில், "குளத்தில் நல்ல நீர் உள்ளது. அங்கு சேரும் சகதியும் இல்லை என்பதால் யானைகளுக்கு ஆபத்தில்லை. மேலும் யானைகளை வெளியேற்றி மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்பும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன" என்றனர்.

யானைகள்

இதையும் படிங்க:உலக பேமஸான சீன யானைகளின் அட்ராசிட்டீஸ் - முழு வீடியோ

ABOUT THE AUTHOR

...view details