தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வால்பாறை அருகே பிரசவத்தின்போது உயிரிழந்த யானை

வால்பாறை அருகே பெண் யானை பிரசவத்தின்போது உயிரிழந்தது குறித்து வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 28, 2022, 2:19 PM IST

கோவை:காட்டுயானைகள் கூட்டமாக நடமாடும் வால்பாறையைச்சுற்றியுள்ள சோலையார் அணை, ஆனைமலைப் புலிகள் காப்பகம், உருளிக்கல், பண்ணி மேடு, சின்கோனா, சின்னக்கல்லார், பெரிய கல்லார் பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக்காவலர்கள் எஸ்டேட் தேயிலைத்தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புப்பகுதிக்கு வராமல் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தாய்முடி எஸ்டேட் பகுதியில் கடந்த 3 நாட்களாக, பெண் காட்டுயானையின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இதனிடையே 7ஆம் நம்பர் காட்டுப்பகுதியில் பெண் யானை உயிரிழந்ததாக வனத்துறையினருக்குத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இன்று (ஆக.28) தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் விசாரணையில் பெண் காட்டுயானை பிரசவத்தின்போது, குட்டியை ஈன்றெடுக்கும் பொழுது உயிரிழந்துள்ளது தெரியவந்தது.

வால்பாறை அருகே பிரசவத்தின்போது உயிரிழந்த யானை

வனத்துறை உயர் அலுவலர் உத்தரவின்பேரில் கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒடிசாவில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்து... 5 பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details