தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கொங்கு மண்டலத்தால் தப்பித்த அதிமுக - பின்னணி என்ன? - Tamil Nadu elections 2021

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. குறிப்பாக, கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி ஸ்வீப் செய்தது. அம்மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கூட திமுக கூட்டணியால் வெற்றிப்பெற முடியவில்லை.

அதிமுக
அதிமுக

By

Published : May 3, 2021, 5:03 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலானக் கூட்டணி வெற்றிப் பெற்று, திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அதேவேளை, கொங்கு மண்டலத்தை தன்வசப்படும் திமுகவின் முயற்சி இம்முறையும் வெற்றிப்பெறவில்லை. கோவை, திருப்பூர் மாவட்டங்களிலுள்ள 18 தொகுதிகளில் 15 தொகுதிகளை அதிமுக கூட்டணி கைப்பற்றியது.

குறிப்பாக, கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி ஸ்வீப் செய்தது. அம்மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கூட திமுக கூட்டணியால் வெற்றிப்பெற முடியவில்லை. அதேபோல், ஈரோட்டிலும் எட்டுத் தொகுதிகளில் ஐந்தில் அதிமுகக் கூட்டணி வெற்றிப் பெற்றது. நீலகிரியில் மட்டும் விதிவிலக்காக மூன்று தொகுதியில் இரண்டை திமுக கூட்டணி கைப்பற்றியது.

வரலாற்று ரீதியாகவே கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாகவே இருந்துள்ளது. எம்.ஜி.ஆர்., அதிமுகவை நிறுவிய காலத்திலிருந்தே அவருக்கு கொங்கு மண்டலம் கைகொடுத்து வந்தது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அதிமுக பிளவுபட்ட நிலையில், ஜெயலலிதாவின் தலைமையிலான அணிக்கு அப்போதே கொங்கு மண்டலம்தான் பலமாக துணை நின்றது.

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் கடும் போட்டிக்கு இடையே ஒரு விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்று, ஜெயலலிதா தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சரானார். இந்த வெற்றியில் கூட கொங்கு மண்டலம்தான் அவருக்கு வெற்றிக் கோட்டையைப் பெற்றுத் தந்தது. கடந்த 2016 தேர்தலில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களிலுள்ள 31 தொகுதிகளில், 28 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. மூன்று தொகுதிகள் மட்டுமே அன்றைய திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்தது.

இம்முறை 2021 தேர்தலிலும், மேற்கண்ட 31 தொகுதிகளில் எட்டில் மட்டுமே திமுக கூட்டணியால் வெற்றிப் பெற முடிந்தது. வரலாற்று ரீதியான பின்புலம் என்பதைத் தாண்டி, அதிமுக தலைமைத் தொகுதியின் மூத்த தலைவர்களான பலமான வேட்பாளர்களை நம்பிக்கையுடன் களமிறக்கியது. செங்கோட்டையன், வேலுமணி, கருப்பண்ணன், பொள்ளாச்சி ஜெயராமன், உடுமலை ராதாகிருஷ்ணன், தனபால் என, அனைவருக்கும் மறுவாய்பபு வழங்கப்பட்டது.

முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமி சேலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சமூக ரீதியாக கொங்கு மண்டலத்தின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்திக் கொண்டது அதிமுகவுக்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்தது. ஜெயலலிதா இருந்திருந்தால் கடைசி நிமிடம் வரை டிக்கெட் உறுதியில்லை என, 233 தொகுதி வேட்பாளர்களும் (ஜெ போட்டியிடும் தொகுதியைத் தவிர) அறிந்த நிலையில், இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தங்களுக்குப் பலமான கொங்கு மண்டலத்தில் மண்ணனின் மைந்தர்களை நம்பி களமிறக்கியது. அதிமுக தலைமையின் நம்பிக்கையை பொய்யாக்காமல், கொங்கு மக்களும், கொங்கு கோட்டையில் ஓட்டை விழாமல் பார்த்துக் கொண்டார்கள்.

ABOUT THE AUTHOR

...view details