கோயம்புத்தூர் போத்தனூர் அம்மன்நகர் மூன்றாவது வீதியைச் சேர்ந்த தம்பதியினர் அப்துல்லா-ஆயிஷா. அப்துல்லா அப்பகுதியில் பால் பொருள்கள் விற்பனை செய்துவருகிறார். இவரின் எட்டு மாத பெண் குழந்தை ஸீஹா ஜைனப்.
இந்நிலையில் இந்தக் குழந்தை மரபணு பாதிப்பினால் ஏற்படும் அரிய வகையான எஸ்.எம்.ஏ. என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குழந்தை இன்னும் ஒரு வருடம் மட்டுமே உயிருடன் இருக்கும்.
குழந்தையைக் காப்பாற்ற குழந்தையின் உடலில் இல்லாத மரபணுவை ஊசியின் மூலம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாயாகும்.