கோவை:கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக, தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான, கோவை மாவட்டம், வால்பாறையிலிருந்து - கேரளாவின் சாலக்குடி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் ஆறுகளில் இன்று (ஆக.2) கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், 'பிள்ளப்பற' என்னும் இடத்தில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியது. வெள்ளம் அதிகரிக்கவே, யானை உயிர்பிழைக்கப் போராடியது. அப்போது எடுக்கப்பட்ட காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.