கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பேருந்து சேவை மற்றும் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து இந்த மாதம் முதல் ரயில்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்துகள் இயங்குவதற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இந்தத் தளர்வுகளை தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு, பேருந்துகள், ரயில்கள் இன்று (செப்.07) முதல் இயக்கப்படுகின்றன.
அதன்படி, கோவை மாவட்டத்தில் காலை 6.10 மணிக்கு சென்னை ரயிலும், 7.15 மணிக்கு மயிலாடுதுறை ரயிலும் இயக்கப்பட்டன. மேலும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து சேவைக்காக முதற்கட்டமாக 353 பேருந்துகள் கோவையிலிருந்து இயக்கப்பட்டன.
பொதுமுடக்க தளர்வு எதிரொலி: ரயில், பேருந்து சேவைகள் தொடக்கம் அதேபோல், சேலம், கன்னியாகுமரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்று முதல் பயணிகள் ரயில் சேவை மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளன. பயணிகளின் வருகையைப் பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆந்திராவிற்கு 2.5 டன் ரேசன் அரிசியை கடத்த முயன்ற வாகனம் விபத்து!